School Song
பாடசாலைக் கீதம்
நாவலர் நாவலர் நாவலர்
ஞாலம் போற்றும் கோவையூரில்
நல்ல கல்வி ஆலயம்
நாவலர் நாவலர் நாவலர்
அன்பு, பண்பு, அறம் வளர்க்கும்
ஆன்ம நேய நெறிகளோடு
தன்மையான தமிழ் வளர்க்கும்
தகுந்த கல்வி ஆலயம்
மூத்த தமிழ் கல்வியோடு
பல்கலைக் கல்வியும்
நாற்றிசையும் பரப்பிடும்
நல்ல கல்வி ஆலயம் (நாவலர்)
சைவத்தமிழ் கற்றிடவே
நாடிவந்த பாலகரை
தெய்வம் போல காக்கும் எங்கள்
சைவ வித்தியாலயம்
பத்தி சித்தி பெற்றுநாம்
சுத்த ஞானம் பெற்றிடவே
வித்தியாலயத்தின் இருந்து
புத்திமதி ஊட்டுவார் (நாவலர்)
நல்லபணி செய்துவரும்
நாவலர் பள்ளியில்
கல்வி ஒளி ஏற்றும் அதிபர்
ஆசிரியர் கூட்டமும்
தீது போக்கி நீதிதரும்
அன்னை தந்தை யாவரும்
கோது நீக்கி ஒன்று சேர்த்து
புகழ வைக்கும் ஆலயம் (நாவலர்)
வாழ்க வாழ்க வாழ்க நிதம்
வாழ்க வாழ்க வாழ்கவே
கோவை நகர் நாவலர்
இந்து தமிழ் வாழ்கவே (நாவலர்)
No comments