School History
பாடசாலை வரலாறு
யாழ் மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு பகுதியில் கோப்பாய் பிரதேச எல்லைக்குள் வரலாற்றுப் புகழ் படைத்த மூத்த சைவப்பாடசாலையாக திகழ்வது நாவலர் தமிழ் வித்தியாலயமாகும். கிறிஸ்தவ மிசனறிகள் குடா நாடெங்கும் பாடசாலைகள் தொடங்கிய நிலையில் கோப்பாயில் 1852 ம் ஆண்டில் விடுதி வசதி கொண்ட பெண்கள் பாடசாலையும் ஆங்கில ஆண்கள் பாடசாலையும் மரியாள் தேவாலயம் அருகில் ஆரம்பமாகின. இங்கு கல்வி கற்பதில் பெரும்பாலான சைவப்பிள்ளைகள் பெரிதும் துன்பமெய்தினர். ஆண்கள் ஓர் வகையில் கால்நடையாகச் சென்று யாழ்ப்பாணப் பாடசாலைகளில் சேர்ந்து படித்தனர். பெண் பிள்ளைகள் படிப்பையே விட்டிருந்தனர்.உடுபுடவை புத்தகம் என்பன இலவசமாக கொடுத்து ஆசை காட்டி மத மாற்றம் செய்து வந்தனர்.திருநீறு தரித்துச் செல்வோர் பாடசாலை வாசலில் நின்று அழித்துவிட்டுச் செல்லும் பரிதாபக் காட்சி திண்ணைப்பள்ளிகள் கூட நடத்த முடியாத நிலை.
நல்லை நகர் ஆறுமுக நாவலர் பெருமானுக்கு இருபாலை சேனாதிராஜ முதலியாருக்குமிடையே குருசிஸ்ய ஒருமைப்பாடு இருந்தது.திருவாடுதுறை ஆதீனத்தில் நாவலர் விருது பெற்று வரும் போது வண்டியை விட்டிறங்கி குருவாகிய முதலியாருக்குப் பக்தி செலுத்தியவர் நாவலர் பெருமான்.அவரை வரவேற்கவென வடகோவை சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் இருந்த குடை கொடி ஆலவட்டமாகிய பொருட்களுடன் மக்கள் செல்வதை அறிந்து அதனை ஏற்க மறுத்து நிறுத்தியவர் பாடசாலையினருகிலுள்ள வில்லு மதவினூடாக நீராடும் போது முதலியாருடன் “நீர் விழுந்தோம்பு” “என்னை விழுந்தோம்பு” என்று சொற் போரிடுவாராம்.தூம்பு என்பது மதகு என்னையென்பது தண்ணீர்.
நாவலர் பெருமான் முதலாவது சைவத்தமிழ்ப் பாடசாலையாக வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தை ஆரம்பித்தார்.அதன் பின்னர் கோப்பாய் மத்தியில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த தர்மக் காணியில் 1872 ம் ஆண்டில் இரண்டாவதாக எமது பாடசாலையை நாவலர் பெருமான் நிறுவினார்.இதற்கு யா/கோப்பாய் நாவலர் சைவ ஆங்கில ஆண் பாடசாலையென நாமகரணம் செய்து கதிரவேலு சட்டமிபயார் என்றழைக்கப்பட்ட முருகேசர் என்பவரை ஆசானாக நியமனம் செய்து வைத்தார்கள்.இப்பாடசாலை பல வரிசை மாற்றங்கள் ஊடாக தற்போதும் பழமை வாய்ந்த சைவத்தமிழ்ப் பாடசாலையாகத் திகழ்கின்றது.தற்போது கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம் என்ற பெயருடன் சகல வளங்களையும் கொண்டு விளங்குகின்றது.
• 1994 இல் சூரியகுமார் மண்டப மேல் மாடி வேலைகள் புர்த்தி செய்யப்பட்டு ஓய்வு பெற்ற வடமானிலக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
• 1996 இல் பாடசாலையின் சுற்றுமதில் பாடசாலைச் சமூகத்தினால் கட்டி முடிக்கப்பட்டது.
• 1996 இல் நீர்த்தாங்கி பல்வேறு நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்டது.
• 2002 இல் 350000.00 வுக்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தால் விளையாட்டு மைதானக்காணி கொள்வனவு செய்யப்பட்டது.
• 2010 ஆம் ஆண்டு கார்த்திகை 10 ஆம் திகதி ஊவா நட்புறவு மண்டபம் கல்வித் திணைக்களத்தின் ஊடாக ஊவா மக்களின் 8.3 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் கட்டப்பட்டு 2011 ஆடி 19 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
• 2011 இல் நாவலர் மண்டபத்துக்கான அத்திவாரம் இடப்பட்டு 2012 மாசியில் அடித்தளம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன் 2016 ஆம் ஆண்டு மேற்தளம் புர்த்தி செய்யப்பட்டு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் திரு இ.இரவீந்திரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
• 2014 ஆம் ஆண்டு மைதானத்திற்காக மேலும் ஒரு காணி திருமதி பிறேமலதா அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
No comments